ஒவ்வொரு நிதியாண்டும் வருமான வரி தாக்கல் செய்கையில், அதனை சேமிப்பதற்கான வழிகளை மக்கள் தேடுவது வழக்கம். இதன் காரணமாகவே, பல வங்கிகள் 5 ஆண்டு காலத்திற்கு வரியை சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகின்றனர். இதனை உபயோகித்து,சம்பளத்தாரர்கள் வருமான வரி தாக்கல் செய்கையில் அதனை குறைக்க உதவியாக இறுக்கும்.
அப்படியோரு வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை தான் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பான் நம்பர் வைத்திருக்கும் எந்தவொரு இந்திய குடிமகனும், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எஸ்பிஐ வரி சேமிப்பு திட்டம்
2006இல் அறிமுகமான இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால், 10 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தப்பட்சமாக ஆயிரம் ரூபாயம், அதிகப்பட்சமாக ஒரு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்
இந்த திட்டத்தில் ஆண்டிற்கு 5.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அதுவே, மூத்த குடிமக்களுக்கு 6.3 சதவீதம் வட்டி கிடைக்ககின்றன.
ஆன்லைன் வழியாக இத்திட்டத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் வழிமுறையை கீழே காணலாம்.
Step 1: முதலில் எஸ்பிஐ நெட் பேங்கிங்-க்கு தேவையான தகவல்களை உள்ளீட்டு லாகின் செய்ய வேண்டும்
Step 2: அதில், ‘e-fixed deposit’ Tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்
Step 3: தொடர்ந்து, Income Tax Saving Scheme’ ஆப்ஷனுக்கு கீழே வரும் ‘e-TDR/e-STDR என்பதை கிளிக் செய்து, ‘proceed’ கொடுக்க வேண்டும்.
Step 4: அடுத்ததாக முதலீடு செய்ய விரும்பும் பணத்தை தொகையை, FD amount பகுதியில் டைப் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் மூத்த குடிமக்களாக இருந்தால், Senior Citizen’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு டிக் செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும்.
Step 6: தொடர்ந்து, ‘Confirm’ கொடுத்தால் போதும், அடுத்த திரையில் உங்கள் பிக்சட் டெபாசிட் தொடர்பான அனைத்து தகவல்களை பார்வையிடலாம்.
வரிவிலக்கு
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் தனிநபர்கள் ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்கில் நிதியை பெறலாம். இருப்பினும், அசல் மீது செலுத்தப்பட்ட வட்டிக்கு முழு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தனிநபரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.
பணம் திரும்பப்பெறுதல்
திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதற்கு முன் கணக்கை திரும்பப் பெற முடியாது. ஒரு வேளை, முதலீட்டாளர் இறந்தால் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 வருட லாக்-இன் காலத்தில் கடன் வசதி கிடைக்காது.