நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
போனி கபூர்
தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு வெளியாகும் அஜித் படம் என்பதால் ‘வலிமை’ ரிலீசை திருவிழா போல் கொண்டாடினர் ரசிகர்கள். மேளதாளம், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பையும் பெற்று வருகிறது ‘வலிமை’. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது இந்தப்படம்.
நயன்தாராவுக்கு வாழ்த்து சொல்லி உருகிய விக்கி: எதுக்குன்னு தெரியுமா..?
படத்திற்கு வந்த ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களின் கூட்டம் திரையரங்களில் அலை மோதுகிறது. படம் வெளியான 10 நாட்களில் ரூபாய் 200 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘வலிமை’ படம் பார்க்க வந்த ஷாலினி அஜித்திடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்ததும், அதற்கு ஷாலினி கொடுத்த ரியாக்ஷனும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குடும்பத்தினருடன் ‘வலிமை’ படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த அஜித் மனைவி ஷாலினியிடம் ரசிகர் ஒருவர், ‘ஹாய் மேடம் அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க? என உற்சாகத்தில் கூற, அவருக்கு ஓகே சொல்வதை போல சைகை காமித்துள்ளர்’ ஷாலினி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
“வலிமை” யான வசூல் வேட்டை; படக்குழுவினர் ஹேப்பி !