வேளச்சேரி: வேளச்சேரி, வீனஸ் காலனி, 2வது விரிவு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (64), தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தம்பதி தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் பக்கத்து அறையை திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. போலீசார் விசாரணையில், நேற்று அதிகாலை, மர்ம நபர்கள் பைப் குழாய் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்று பின்னர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து, 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.