ஸ்கில்டு வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும், இன்ஜினியர்கள், நர்சுகள், மருத்துவர்கள், மிஷின் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட பல திறன் சார்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உலக நாடுகளிலும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதனுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் நாம் வேலை புரியும் நாட்டின் குடியுரிமை கிடைப்பதில் பல சிக்கல்கள் மற்றும் வழிமுறைகள் உள்ளன. இதம் காரணமாக குடியுரிமை கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
வொர்க் பர்மிட் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நாடு விட்டு நாடு சென்று பணி புரிகின்றனர். ஆனால் பலரும் குடியுரிமையின்றி தாய் நாட்டிற்கே திரும்புகின்றனர்.
மேலும் படிக்க: Passport: வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?
இந்நிலையில் வெளிநாடு, ஹனிமூன், சினிமா பாடல் காட்சி என்றாலே கண் முன் வந்து நிற்கும் பிரபலமான நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து, குடியிருப்பு உரிமையும் தந்து நல்ல சம்பளமும் தந்து பிற நாட்டினரை பணி நிமிதமாக சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது வொர்க் பர்மிட் விசா பெரும் முறையில் சில தளர்வுகளை அறிவிக்கவுள்ளது. மேலும், பணியாளர்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்கும் முறையையும் எளிதாக்கவுள்ளது.
2022 இன் இறுதியில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, ஃபெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த முயற்சியின் முதல் நடவடிக்கையாக, திறனுள்ள தொழிலாளர்களின் வொர்க் பர்மிட்டின் விண்ணப்பிப்பத்திற்கான நிர்வாக தடைகளை எளிதாக்குவதை சுவிஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: வெளிநாடு செல்ல உங்கள் பாஸ்போர்டில் இதை இணைக்க வேண்டியது மிக அவசியம் : விவரம் இதோ
இரண்டாவதாக, குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கவிருக்கிறது. மேலும், மூன்றாவது நடவடிக்கையாக, பற்றாக்குறையிலிருக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், கல்வி தகுதி இல்லாவிட்டாலும் கூட, குடியிருப்பு அனுமதியைப் பெற முடியும் வகையில் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.
இதுவரை, இது சிறப்பு தொழில்முறை அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் வெளிநாட்டு பணியில் மோகம் கொண்ட பலர் மும்புரமாக புறப்பட தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க: e-Passport: நாசிக்கில் அச்சிடப்படும் இந்தியாவின் டிஜிட்டல் இ-பாஸ்போர்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR