உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவே மீண்டும் வெல்லும் என்று ரிபப்ளிக் டிவி – மாட்ரிஸ்
கருத்துக் கணிப்பு
தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று கடைசிக் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இம்மாநிலத்துக்கான எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட ஆரம்பித்தன.
ரிபப்ளிக் டிவியும்- மாட்ரிஸும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜகவுக்கு 262 முதல் 277 இடங்கள் வரையும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 119 முதல் 134 இடங்கள் வரையும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் மிக மோசமான இடங்களைப் பெறுமாம்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7 முதல் 15 இடங்கள் வரையும் காங்கிரஸுக்கு 2 முதல் 8 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பிற கட்சிகளுக்கு 2 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக இதை விட அதிக இடங்களில் வென்றிருந்தது. அதேசமயம், சமாஜ் வாடிக் கட்சி குறைந்த இடங்களில் வென்றிருந்தது . தற்போது இந்த இரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தல் முடிவுக்கு தலைகீழாக இப்போது ரிசல்ட் வந்துள்ளது. அதேசமயம், பகுஜன் சமாஜ் கட்சி கிட்டத்தட்ட அழிந்தே போய் விட்டது. காங்கிரஸ் முற்றிலும் கரைந்து போய் விட்டது என்பதையும் ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது.