உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போரை நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை சந்தித்த முதல்வர்
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.
நெல்லை பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளை அவர் சந்தித்து பேசினார். அப்போது மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
பெற்றோர் நிதி உதவி
உக்ரைனில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்ய அமைச்சர் ஒசூரைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் ரூ.25,000 நிதி வழங்கினர்.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு தலைவர்களிடமும் இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.
‘20,000 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்’
உக்ரைனில் இருந்து 20,000 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியா உதவியது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.
தங்கம் விலை அதிகரிப்பு
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
சென்னையில் பவுன் தங்கம் ரூ.40,000 ஐ எட்டியது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் அறிவித்துள்ளது.
உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவர் உக்ரைனுக்கு 2018 இல் படிக்கச் சென்றார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவிலிருந்து சுத்திகரிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது. மேலும், மேலும் 32 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பெலாரஸ் அதிகாரிகளின் சொத்துகளை ஜப்பான் அரசு முடக்கியுள்ளது.