மெட்டா தலைமையின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் புதிய ‘Poll’ அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் வசதிக்காக நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு, பயன்பாடு என அனைத்திலும் நிறுவனம் கவனம் செலுத்தி அப்டேட்டுகளை அளித்து வருகிறது.
தனியுரிமை கொள்கை மாற்றம் செய்யப்பட்டபோது, இந்த செயலியின் பயனர்கள் பலர், வாட்ஸ்அப்பை விட்டு விலகி, டெலிகிராம், சிக்னல் போன்ற பயன்பாடுகளுக்கு தாவினர். இதனை சரிசெய்யும் விதமாக, நிறுவனம் தற்போது பயனர் பயன்பாட்டுக்கென அதிரடி அம்சங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் புதிய அப்டேட்
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி, வாட்ஸ்அப் புதிய ‘Poll’ அம்சத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ‘WABetaInfo’ தளம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. முதலில்
iOS
பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. v2.22.6.70 எனும் ஐஓஎஸ் பீட்டா பதிப்பின் மூலம் இந்த அம்சம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய பேஸ்புக் தளத்தில், போல் அம்சம் கொடுக்கப்பட்டிருந்தது. பயனர்கள் வாக்கெடுப்பு முறையைத் தேர்ந்தெடுத்து, புதிய ‘Poll’ஐ உருவாக்க முடியும். வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள், உருவாக்கப்பட்ட போல்களுக்கு பதிலளிக்க முடியும். இதே அம்சம், முன்பு பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் Android அப்டேட்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகவும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதில், எமோஜிகளுக்கு புதிய தோற்றம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய அனிமேஷன்களை வாட்ஸ்அப் நிறுவவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இலவசம்!
வாட்ஸ்அப் கம்யூனிட்டி
புதிதாக ஒரு அம்சத்தினை நிறுவவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது குழுக்களை (Whatsapp Groups) போன்று வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை (
Whatsapp Community
) உருவாக்க நிறுவனம் திட்டம் தீட்டிவருகிறது. இதற்கான பீட்டா அப்டேட்டும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
வெளியான தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது, பல குழுக்களை ஒருங்கிணைக்க கம்யூனிட்டிகள் உதவும் என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், சிதறி கிடக்கும் குழுக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று வாட்ஸ்அப் நினைக்கிறது.
ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!
கணக்குகளுக்கு தடை
சமீபத்தில் வாட்ஸ்அப் ஜனவரி மாதத்திற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, வாட்ஸ்அப் கணக்குகளின் மூலம் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 18 லட்சத்து 58 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!
பயனர் தரப்பிலிருந்து வரும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட கணக்கு மீட்கப்பட்டாலோ குறிப்பிட்ட கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
Read more:
மெட்டா நிர்வாகி செய்த காரியம்WhatsApp பயனர்களே உஷார் – சுமார் 18 லட்சம்கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப