தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை… சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
Advice Avvaiyar
சாதி ஆவணக் கொலைகள் என்றுமே தடுத்து நிறுத்தப்பட பட வேண்டிய ஒரு விஷயம். காலங்கடந்த தீர்ப்புகள் தவிர்க்கப் பட வேண்டிய அதே வேளையில் ,சம்பந்தப் பட்டவர்கள் மட்டுமல்ல,சமூக மாற்றங்களும் அவசியம். காலங்கள் மாற மாற, மனித மனங்கள் மட்டும் மாறாமவேயே இருப்பதும் காரணம்..இனியாவது மாற்றம் வரனும்.
karunakaran1183
ஆணவக்கொலைய யாராலும் தடுக்க முடியாது
Sasi Pothu Nalan Virumbi
தண்டனை சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும். மேலை நாடுகளில் உள்ளதுபோல் மிகக்கடுமயான தண்டனை பொதுமக்களின் முன்னிலையில் நிறைவேற்ற பட வேண்டும். தலையை துண்டிக்க கூடிய அளவுக்கு சாதி வெறி குற்றவாளிக்கு இருக்கும் பட்சத்தில், அதேபோல் தண்டனையும் எவ்வித தயவு தாட்சனைக்கும் இடம் அளிக்காதவாரு மிக கொடூரமாக தண்டனை நிறைவேற்ற பட வேண்டும். அப்போது மட்டுமே இது போன்று குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை உண்டாக்கும். மேற்கொண்டு நடைபெறாமல் இருக்கும். அதே போன்று கொலைக்குற்றம் போன்ற பெரிய குற்ற செயலில் ஈடுபடுவோருக்கு சலுகைகள் சிறைகளில் கிடைக்காமல் இருக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.
Subbu Subbu
சாதி இந்தியாவின் சாபக்கேடு. மாற்ற முடியும். ஆனால் மாற்றம் செய்பரே சாதி வெறியர்கள் அல்லவா?
Kannan Bks
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அல்லது திருடனுக்கு உடனுக்குடன் மரண தண்டனை கொடுக்க வேண்டும்
சமீபத்திய செய்தி: “கோட்சேவே 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார்”-பேரறிவாளன் வழக்கில் காரசார வாதம்-முழுவிவரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM