Actress And MLA Roja Speech About CM Stalin : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசேவாகக்த்தில் நடைபெற்ற புகழ் அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாலி் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்டு தற்போது ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து ஆந்திராவில் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட அவர், தற்போது ஆந்திராவின் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
தனது தீவிர அரசியல் பணிக்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று கூறி வரும்ரோஜா, அவரின் அவருடைய பாணியையே கையில் எடுத்துள்ளதாக பல நேரங்களில் கூறியுள்ளார். தொடக்கம் முதலே கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நடிகை ரோஜா, அந்திராவில் மின் தடை ஏற்பட்ட போது நெசவாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இதனால் நெசவாளர்களின் ஆதரவைபெற்ற ரோஜா தற்போது ஆந்திராவின் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் தமிழக நெசவாளர்களுக்கு ஆதரவாகவும், செயல்பட முடிவு செய்துள்ள ரோஜா, நெவாளாகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை போல தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் நெசவாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று நம்புவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை புரசேவாகத்தில் தானே தெருவில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் புகழ் அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஜா பேசுகையில், எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றாலும் மாமியார் வீடு தமிழ்நாடு.. இங்குள்ள மக்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி நான் தமிழகத்திற்கு வந்ததற்கு இரண்டுபேர்தான் காரணம். ஒன்று முதல்வர் ஸ்டாலின் மற்றொன்று அமைச்சர் சேகர்பாபு… எதிர்கட்சியாக இருந்தபோது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் மேடையை அலங்கரித்த முதல்வர் ஸ்டாலின் இப்போது தமிழக மக்களுக்காக மின்னல்போல செயல்படுகிறார்.
பொதுமக்களுக்கு அவர் செய்யும் வளர்ச்சித்திட்டங்கள் காரணமாக நிச்சயம் இன்னும் 30 வருடங்களுக்கு தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினே தொடர்வார். அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அந்த துறையின் பவர் என்ற சொல்லுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசுக்கு நிதி கொடுக்கும் துறையா அறநிலையத்துறையை செயல்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.