உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, மருந்து என 120 டன் நிவாரணப் பொருட்களை ரஷ்யா அனுப்பி உள்ளது.
ரஷ்யாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் அவர்களுக்காக, 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையத்தையும் ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது.