உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்களை பரிமாற்றம் செய்ய முன்வந்த போலந்து நாட்டின் திட்டத்தை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது.
உக்ரைனுக்கு ஆதரவாக தங்களது 23 மிக் 29 போர் விமானங்களையும் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிபிக்நியு தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலாக அமெரிக்காவிடம் பயன்பாட்டில் இருக்கும் போர் விமானங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜான் எப் கிர்பி, போலந்தின் திட்டம் ஏற்கத்தக்கது அல்ல என்றார்.
இது நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவித்தார். தற்போதுள்ள தளவாட சவால்கள் குறித்து போலந்து மற்றும் நேட்டோவில் உள்ள நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.