உக்ரைன்
மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. மேலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தை கைபெற்றியுள்ளது.
அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. அதன்பலனாக, உக்ரைன் – ரஷ்யா இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
போரில் திடீர் திருப்பம்: நேட்டோ விருப்பதை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!
இந்த நிலையில், உக்ரைன் மீதான போர் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் வகையில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ளமேரிபோல், கிழக்கில் உள்ள வோல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்ததை சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது. ஆனால், போர் நிறுத்தத்தை ரஷ்ய ராணுவம் கடைபிடிக்கவில்லை. மேரிபோல் நகரம் மீதுரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்ய தரப்பு, பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க உக்ரைன் ராணுவமே தாக்குதல் நடத்தி வருவதாக விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.