உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் இருந்துசுமார் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று ஐ.நா.சபை அகதிகள் ஆணையத்தின் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்தார்.
இந்தநிலையில், உக்ரைனில் இருந்து
போலந்து
நாட்டுக்கு அகதியாக செல்லும் சிறுவன் ஒருவன் அழுது கொண்டே தனியாக செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. எல்லைப்பகுதியான மெடிஸ்கா கிராமத்தில் அந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், எல்லையை கடந்து செல்லும் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே தனது பொருட்கள் அடங்கிய பையை போலந்து நாட்டிற்குள் இழுத்து செல்கிறான். இந்த காட்சிகள் பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. பலரும் அச்சிறுவனுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போதைய தகவலின்படி, அந்த சிறுவனைப் பற்றிய விவரம் எதுவும் வெளியாகவில்லை. சிறுவன் மட்டும் தனியாக செல்கிறானா அல்லது அவனது குடும்பத்தினர் அவனுக்கு பின்னாலோ அல்லது முன்னாலோ செல்கின்றனரா என்றும் தெரியவில்லை. அந்த சிறுவன் மட்டும் தனியாக உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
8 வயது ஆலிஸ்.. நடுத் தெருவில்.. கண்ணீர் விட்ட உக்ரைன் அதிபரின் மனைவி!
இதனிடையே, உக்ரைன் மீதான போர் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் வகையில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.