தாய்நாட்டை பாதுகாக்க காடு, கழனி மட்டுமின்றி தெருவில் இறங்கி சண்டையிடவும் உக்ரைனியர்கள் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாடிய அதிபர் செலன்ஸ்கி, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படைகளை இங்கிலாந்து மக்கள் துணிவுடன் எதிர்கொண்டதை போல், ரஷ்ய படைகளை உக்ரைன் மக்கள் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
போரில் பின்வாங்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்த செலன்ஸ்கி, ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். ரஷ்ய படைகள் எட்டிவிடும் தூரத்தில் உள்ளநிலையில் போராடி வரும் செலன்ஸ்கியின் தைரியத்தை பாராட்டிய பிரிட்டன் பிரதமர், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி அளித்தார்.