இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு நுழைந்தபோது, பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. முதல் அலையைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் தொடர்ந்ததால் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்தது.
இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், வரும் 27-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. வாக்குப் பதிவு எந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் சமாஜ்வாடி- பைனாகுலர் மூலம் பார்வையிடும் வேட்பாளர்