சென்னை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியான தீர்ப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்றுள்ளது.
டந்த 2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவினை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளது:
அதில் “கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்ட இதர 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சற்றே தாமதிக்கப்பட்ட நீதியெனினும் சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.