செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – உக்ரைன் எச்சரிக்கை

Ukraine Update In tamil : உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு மாகாணங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால் உகரைனில் இருந்து மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை வைத்து வருகினறனது.

இந்நிலையில், உன்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் இன்றைய டாப் 5 நிகழ்வுகள்:

செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – உக்ரைன் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்தின் மின் பாதையில் பழுதுபார்க்க அனுமதிக்கும் வகையில் இன்று தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் முறையிட்டது, மேலும் மின்சார தடை ஏற்பட்டால், கதிர்வீச்சு கசிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையேயான தாக்குதல் நடவடிக்கையால், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கட்டம் ஆலைக்கான உயர் மின்னழுத்த மின் கம்பியை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை.

ஆலையில் செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளைக் குளிர்விக்க முடியாவிட்டால் கதிரியக்கப் பொருட்கள் வெளியாகலாம் என்று எனர்கட்டம்  எச்சரித்து்ளளது. மேலும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இருப்பு டீசல் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றால், ஆலைக்கு 48 மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும் “அதன் பிறகு, செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளுக்கான சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் நிறுத்தப்படும், இதனால் உடனடியாக கதிர்வீச்சு கசிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது, மேலும் ரஷ்ய நபர்களை குறிவைப்பது மற்றும் மாஸ்கோவின் நட்பு நாடான பெலாரஸில் வங்கிகளைச் அதனுடன் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

27 நாடுகளின் கூட்டமைப்பு மேலும் 160 ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னலக்குழுக்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தது, ரஷ்யாவிற்கு கடல்வழி, தொழில்நுட்பம் ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்தது பெலாரஸில் ரஷ்யா உக்ரைனைத் தாக்க பயன்படுத்திய படைகளை குவித்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் பெலாரஸில் உள்ள வங்கித் துறையையும் குறிவைத்துள்ளது.

ஜெர்மனி உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது – ஸ்கோல்ஸ்

ஜெர்மனி நிச்சயமாக உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது என்று அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், போலந்து தனது ரஷ்ய தயாரிப்பான MiG-29 ஜெட் விமானங்களை ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தளத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பை அமெரிக்கா நிராகரித்ததை அடுத்து.

“நாங்கள் அனைத்து வகையான தற்காப்புப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்… நாங்கள் உங்களுக்குச் சொன்ன ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் என்றும் கூறிய அவர் “நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும் ஆனால்  நிச்சயமாக உங்களுக்கு போர் விமானங்கள் குறித்து பிரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் குண்டுவீசிய ரஷ்யா

உக்ரேனிய நகரமான மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ரஷ்ய விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாக நகர சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் குழந்தைகள் மருத்துவமனை மீது பல குண்டுகளை வீசியுள்ளன. இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்கள் இன்றும் வரவில்லை. ஆனால் உக்ரைன் மீதான தனது தாக்குதலில் பொதுமக்களை குறிவைத்ததை ரஷ்யா மறுத்துள்ளது.

உக்ரைனில் பிளேக் மற்றும் ஆந்த்ராக்ஸுடன் உயிரி லேப்கள் இருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைனில் ஒரு இராணுவ உயிரியல் திட்டம் இருப்பது குறித்து அமெரிக்க விளக்க வேண்டும் என் ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் இது ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என்று ஏற்கனவே வாஷிங்டன் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, கூறுகையில்,

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24 அன்று தாக்குதல் நடத்தியபோத ராணுவ உயிரியல் திட்டத்தின் ஆதாரம் ரஷ்யாவால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார். இதில் பிளேக் மற்றும் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்க்கிருமிகளும் உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக உக்ரைன் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உக்ரைனில் கூறப்படும் இராணுவ உயிரியல் திட்டம் பற்றியரஷ்ய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் “இதுஅபத்தமான குற்றச்சாட்டு ரஷ்ய தவறான தகவலை பரப்புகிறது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 24 க்குப் பிறகு பிளேக், காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மாதிரிகளை அழிக்க உக்ரைனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டதைக் காட்டும் ஆவணங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக ஜகரோவா கூறியுள்ளார்.  ஆனால் அத்தகைய ஆவணங்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.