சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக பிரமுகர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக கல்யாணராமன் கைது செய்யப்பட்டிருந்தார்.