
நலன் குமாரசாமி இயக்கத்தில் வசந்த் ரவி
சூது கவ்வும் என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த நலன் குமாரசாமி அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். சூது கவ்வும் படத்திற்கு பிறகு காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். இது ஒரு கொரியன் படத்தின் தழுவல். படமும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு சில படங்களுக்கு வசனம் எழுதினார்.
இந்த நிலையில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். இதில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அவர் தேதி ஒதுக்கித் தராமல் இழுத்தடித்ததால் அந்த கதையை ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கு கதை பிடித்திருந்தாலும் கொஞ்சம் பிசியா இருக்கேன் வெயிட் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து தரமணி, ராக்கி படங்களில் நடித்த வசந்த் ரவி, நலன் குமாரசாமியுடன் இணைகிறார். ரவியே படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.