நினைத்தது நடந்து விட்டது.. வரலாற்று உச்சத்தினை உடைத்த தங்கம் விலை.. இனி இந்தியாவில் எப்படி?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. நிபுணர்களின் கணிப்பினை போல சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை உடைத்துள்ளது.

இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது விரைவில் அதன் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்? மற்ற முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இந்த லெவலில் தங்கத்தினை வாங்காலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

TN Budget 2022: 500 எலக்ட்ரிக் பஸ் வாங்கும் மாபெரும் திட்டம்.. ஜெர்மனி வங்கி நிதியுதவி..!

வரலாற்று உச்சம் உடைப்பு

வரலாற்று உச்சம் உடைப்பு

தங்கம் விலையானது கடந்த 2020ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் 2075.88 டாலர்களை தொட்டது. இது கடந்த அமர்வில் 2078.80 டாலர்களாக உச்சம் தொட்டது. இதற்கிடையில் இன்று சற்று கீழாக காணப்பட்டாலும், தற்போது 2063 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தினை உடைத்து இருந்தாலும், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 56,200 ரூபாய் என்ற உச்சத்தினை இன்னும் உடைக்கவில்லை. இது தற்போது 55000 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. எனினும் விரைவில் இந்த உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆபரண தங்கம் விலையும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தடை

அமெரிக்காவின் தடை

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதனால் தான் அங்கு போர் பதற்றம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளையும் விதித்தார். குறிப்பாக ரஷ்யாவின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி காரணியாக இருக்கும், எண்ணெய் வணிகத்தினையே தடை செய்தார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ஏனெனில் இது இவ்விரு நாடுகளை மட்டும் அல்லாது, சர்வதேச அளவில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை Vs பணவீக்கம் Vs தங்கம்
 

எண்ணெய் விலை Vs பணவீக்கம் Vs தங்கம்

எண்ணெய் வீதான தடைக்கு மத்தியில் எண்ணெய் விலையும் வரலாறு காணாத உச்சத்தினை உடைத்தது. இது பணவீக்கத்தினை தூண்டலாம் என்ற அச்சத்தின் மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மொத்தத்தில் இதுவும் தங்கம் விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி

ஃபெடரல் ரிசர்வ் வங்கி

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகளாவது வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையனது அதிகரிக்கவே பல காரணிகள் சாதகமாக உள்ளன.

ரூபாய் சரிவு

ரூபாய் சரிவு

தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 76.83 ரூபாய் என்ற லெவலில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் இன்று 77 ரூபாய்க்கு மேலாக வீழ்ச்சி கண்டு தற்போது சற்றே அதிகரித்துள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் அடுத்ததாக 2100 டாலர்களை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் புதிய வரலாற்று உச்சத்தினை பதிவு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது உச்சம் தொடலாம்.

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் அதிபர் சமாதானத்திற்கு தயார் என்று கூறியிருந்தாலும். இது செயல்பாட்டுக்கு வருமா? போர் பதற்றம் குறையுமா? அல்லது மீண்டும் தொடங்குமா? ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இது இந்த முறை எப்படி இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.ஆக துருக்கியில் நடக்கவிருக்கும் இந்த பேச்சு வார்த்தையானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றும் பலமான ஏற்றத்தினையே கண்டு காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 21.50 டாலர்கள் அதிகரித்து, 2064.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

வெள்ளி விலை தற்போது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.84% அதிகரித்து, 27.390 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் உச்சத்தினை உடைக்கலாம் எனும் விதமாகவே உள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 668 ரூபாய் அதிகரித்து, 54,892 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைப்பது போல காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது நல்ல ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 231 ரூபாய் அதிகரித்து, 70,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைக்கலாம் எனும் விதமாகவே உள்ளது. ஆக வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, 5105 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, 40,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 93 ரூபாய் அதிகரித்து, 5569 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 744 ரூபாய் அதிகரித்து, 44,552 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 55,690 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 77.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 776 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 3000 ரூபாய் அதிகரித்து, 77,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 9th 2022: gold prices break above historical high in Comex, what you should DO?

gold price on march 9th 2022: gold prices break above historical high in Comex, what you should DO?/நினைத்தது நடந்து விட்டது.. வரலாற்று உச்சத்தினை உடைத்த தங்கம் விலை.. இனி இந்தியாவில் எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.