சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று 2022-23ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்களை மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார்.
இந்த பெட்டியை ராய்ப்பூரில் கால்நடை வளாகத்தில் பத்து நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. சாணப் பொடி, பசை மற்றும் மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் சமஸ்கிருதத்தில் ‘கோமயே வஸதே லக்ஷ்மி’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு ‘செல்வத்தின் தெய்வம் லக்ஷ்மி பசுவின் சாணத்தில் வசிக்கிறாள்’ என்று அர்த்தமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது- பகவந்த் மான்