இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளால் தேர்தலில் களம் இறங்கியுள்ள கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
அதன்படி, பஞ்சாப் தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று ஷிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கருத்துக் கணிப்புகளை பஞ்சாப் மக்கள் நம்பமாட்டார்கள். கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும். இதில் வாக்காளர்கள் சம்பந்தப்படவில்லை என்பதை தேர்தல் ஆணைணயம் தொடர்ந்து கண்காணிக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் சில அரசாங்கங்களே பொதுப் பணத்தைப் பயன்படுத்தி கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றன. ஆம் ஆத்மி இதை செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
குமரி மீனவர்கள் 33 பேர் சீசெல்சில் கைது