குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையின் இருசக்கர உதிரிபாக விற்பனை கடைக்கு தீ வைத்து எரித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்திவருகிறார். மாரியப்பனுக்கு அவரது மகன் லட்சுமணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டுள்ளார் அதற்கு மாரியப்பன் தரமுடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர் கேட்ட பணத்தை கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்த லட்சுமணன் இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு தீ வைத்து தப்பி சென்றுவிட்டார்.
கடை முழுவதும் தீப்பற்றியது உடல் அருகில் இருந்த இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை கலன் கிரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தந்தை மீது இருந்த கோபத்தை கடைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.