பாகிஸ்தான் வாலாட்டினால்.. மோடி சுளுக்கெடுப்பார்.. அமெரிக்கா எச்சரிக்கை

பிரதமர்
நரேந்திர மோடி
தலைமையிலான இந்தியா, முன்பு போல இல்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் ராணுவத் தாக்குதலில் இந்தியா ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் குறித்த பல முக்கியத் தகவல்களை அது பகிர்ந்துள்ளது. அதில்தான், இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக முக்கிய தகவல்களை அது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த கால அரசுகள் போல இப்போதைய நரேந்திர மோடி அரசு இல்லை. பாகிஸ்தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவிடம் மீண்டும் வாலாட்டினால், இந்த முறை இந்தியா நிச்சயம் ராணுவத் தாக்குதலை நடத்தும். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு அதில் உறுதியாக உள்ளது.

அதேசமயம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல்கள், போர் அளவுக்கு போகும் வாய்ப்புகள் குறைவுதான். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் அவற்றுக்கிடையே போர் மூளும் அபாயங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் உள்ள இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. ஆனால் முன்பு போல இப்போது அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதில் உறுதியாக உள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதைச் செய்தால், நிச்சயம் இந்தியா ராணுவ ரீதியிலான பதிலடியைக் கொடுக்கும்.

இந்தியா சீனாவைப் பொறுத்தவரை தொடர்ந்து பதட்ட நிலையே காணப்படுகிறது. 2020ம் ஆண்டு இரு நாட்டுப் படையினருக்கு இடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மனக்கசப்பும் குறைந்தபாடில்லை. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்புகளே உள்ளன.

அண்டை நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதை சீனா விரும்பவில்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, தைவானாக இருந்தாலும் சரி, அதை சீனா விரும்பவில்லை. இதனால்தான் அவர்களை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்ள அது முயல்கிறது. தனது படை பலத்தாலும், பொருளாதார சக்தியாலும் இந்த நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர அது முயல்கிறது.

தைவானை தனது நாட்டின அங்கமாக தொடர்ந்து சீனா கூறி வருகிறது. தைவானை சீனாவுடன் இணைக்கவும் அது தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக பெரும் மோதல் மூளும் வாய்ப்புகளும் உள்ளன. தைவானை, சீனாவுடன் இணைக்க அந்த நாட்டு தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவின் அழுத்தங்களுக்குப் பணிய அவர்கள் மறுத்து வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.