புலமைச்சொத்து சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பான விவாதத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திகளை கூடுதலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியும் என விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாட்டின் தேயிலை, மரமுந்திரிகை, வள்ளப்பட்டை மற்றும் உள்நாட்டு உணவு தொடர்பான புலமைச்சொத்து உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
‘கொலன்னாவை மிளகு’ என்ற பெயரில் பேட்டன் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். நாட்டின் ஐந்து நிறுவனங்கள் ‘எதனோல்’ உற்பத்தியில் ஈடுபடுவதால் எதனோலை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகளில் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்துள்ள போதிலும் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.