தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண்கள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பெற்றெடுக்கவே விரும்புவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில், தமிழ்நாட்டை சேர்ந்த 8.9 விழுக்காடு தாய்மார்கள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பெற்றெடுக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் என ஒப்பிட்டுப் பார்த்தால் மிசோரம் மாநிலத்தில் 21.4 விழுக்காட்டினரும், மேகாலயாவில் 21.1 விழுக்காட்டினரும் பெண் குழந்தைகள் தேவை என்றே பதில் அளித்துள்ளனர். இதுவே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெறும் ஒரு விழுக்காடாக உள்ளது. பெண் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், பெண் குழந்தைகளின் கல்வி நிலை உயர்ந்திருப்பதுமே தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் தேவை என நினைப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM