உக்ரைன்
மீது
ரஷ்யா
தொடுத்துள்ள போர் இன்று 11வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் ரஷியா, உக்ரைன் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் பலவும் போரை கைவிடும்படி ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வரும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கவிஞர்
வைரமுத்து
ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து டிவிட்டியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,
போரை நிறுத்துங்கள் புதின்
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்… என குறிப்பிட்டுள்ளார்.