கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமைக்ரான் தொற்று காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவது,
ஹாங்காங்
நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளும் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
அமல்படுத்த
ஹாங்காங்
நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களை பொது மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.
அடம் பிடிக்கும் விளாடிமிர் புடின் – போரை நிறுத்த முடியாது என கறார்!
இதற்கிடையே முழு ஊடரங்கு அச்சம் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், ஹாங்காங்கில் இருந்து சுமார் 85 ஆயிரம் பேர் சிங்கப்பூர் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருப்பதால் அந்நாட்டு அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.