கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் புதிய பெண் நிதியமைச்சராக சந்திரிமா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று தன் அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இதன்படி நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், நிதித் துறை இணையமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதியமைச்சர் பொறுப்பை, மம்தா பானர்ஜி வகித்து வந்தார்.
நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சந்திரிமா பட்டாச்சார்யாவுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் அசாமில் பா.ஜ., அரசு, முதல் பெண் நிதியமைச்சராக, அஜந்தா நியோக்கை நியமித்தது. மத்திய அரசில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முதல் பெண் நிதியமைச்சர் என்ற சிறப்பை பெற்றார். தற்போது நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக உள்ளார்.
ஒரே மேடையில் மம்தா – பிரசாந்த் கிஷோர்திரிணாமுல் காங்., தேர்தல் ஆலோசகரான ‘ஐ-பேக்’ நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோருக்கும், அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் மோதல் என, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. கட்சி விவகாரத்தில் பிரசாந்த் தலையிடுவதால் மோதல் உருவானதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கோல்கட்டாவில் திரிணமுல் கட்சி கூட்டத்தில், ஒரே மேடையில் மம்தாவும், பிரசாந்த் கிஷோரும் அமர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
Advertisement