ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்-க்கு புதிய பிரச்சனை..!

ரஷ்யா உக்ரைன் போர் மூலம் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஐடி துறை மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..? ரஷ்யா தொடுத்துள்ள போர் மூலம் ஐடி துறைக்குத் தற்போது பல பிரச்சனைகள் அடுத்தடுத்து உருவாகியுள்ளது.

3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை ரஷ்யா உக்ரைன் போர் நிலவரத்தையும், அதன் மூலம் ஏற்படும் வர்த்தகப் பாதிப்பையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

 ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் போர் மூலம் இவ்விரு நாடுகள் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய யூனியன், பிற சோவித் நாடுகளும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் மறைமுகமாக உலக நாடுகள் அனைத்தும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், மந்தமான வர்த்தகம், பொருளாதாரச் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

 உக்ரைன் ஐடி துறை

உக்ரைன் ஐடி துறை

தற்போது போர் மூலம் மொத்தமாகப் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைன் நாட்டில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுமார் 4000 ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது.

 ஐரோப்பா முதல் சோவியத் நாடுகள் வரை
 

ஐரோப்பா முதல் சோவியத் நாடுகள் வரை

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு முக்கியமான வெளிநாட்டு வர்த்தகச் சந்தையில் உக்ரைன் மிக முக்கியமானது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஐரோப்பா, உக்ரைன், ரஷ்யா, சோவியத் நாடுகளில் இயங்கி வருகிறது.

 இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

உக்ரைன் – குளோபல் லாஜிக்

ரஷ்யா – இன்போசிஸ்

பெலாரஸ் – டெக் மஹிந்திரா

போலந்து – எல் அண்ட் டெக்னாலஜிஸ் சர்வீசஸ், காக்னிசண்ட், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா

ஹங்கேரி – ஹெச்சிஎல் டெக், காக்னிசண்ட், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா

செக் குடியரசு – இன்போசிஸ், டெக் மஹிந்திரா,ஹெச்சிஎல் டெக்

குரோஷியா – இன்போசிஸ், குளோபல் லாஜிக்

லாட்வியா – டெக் மஹிந்திரா, இன்போசிஸ், காக்னிசண்ட்

லூதியானா – காக்னிசண்ட், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்

பல்கேரியா – இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்

ஸ்லோவாக்கியா – இன்போசிஸ், டெக் மஹிந்திரா, குளோபல் லாஜிக்

 ஐடி செலவினங்கள்

ஐடி செலவினங்கள்

இந்தப் போர் காரணமாக ஐரோப்பா, உக்ரைன், ரஷ்யா, சோவியத் நாடுகளில் மட்டும் அல்லாமல் உலகளவில் மிகப்பெரிய வர்த்தகம் வருவாய் பாதிப்பு ஏற்பட உள்ளது. இந்தப் பாதிப்பின் காரணமாக அரசும் சரி, நிறுவனங்களும் சரி செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டும். இது இயல்பான ஒன்று, ஆனால் இது ஐடி துறைக்குப் பெரும் பாதிப்பு.

 பாதிப்பு

பாதிப்பு

இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்று, அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி இயங்கி வரும் நிலையில் IT Spending அதாவது தொழில்நுட்ப சேவை மேம்பாட்டுக்குச் செலவு செய்யும் தொகை குறைத்தால் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவது ஐடி நிறுவனங்களும், ஐடி ஊழியர்களும் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia-Ukraine war may lead to cut IT spending; New trouble for TCS, Wipro, Infosys, HCL

Russia-Ukraine war may lead to cut IT spending; New trouble for TCS, Wipro, Infosys, HCL ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்-க்கு புதிய பிரச்சனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.