ரஷ்யா – உக்ரைன் போரைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் தான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதித்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 131 டாலரை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியா உடன் அமெரிக்க மிகவும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்த கதையை மாற்றியுள்ளது சவுதி அரேபியா..
ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!!

முகமது பின் சல்மான்
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவின் Shale மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடத்திய மிக முக்கியமான மற்றும் அவசியமான ஆலோசனைக் கூட்டத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்தும், 2014-2016 எண்ணெய் விலை போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளது.

OPEC+ நாடுகள்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த போது உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்த நிலையில், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் OPEC+ ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவதாகவும், எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையில் அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் அறிவித்து ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்றார். இதையே தான் அனைத்து OPEC நாடுகளும் செய்தது.

ரஷ்யா – உக்ரைன் போர்
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் விலை 132 டாவர் வரையில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சவுதி அரேபியா-விடம் உற்பத்தியை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது.

400000 பேரல் மட்டும்
ஆனால் சவுதி எவ்விதமான கூடுதல் உற்பத்தியும் செய்ய முடியாது, ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 400000 பேரல் கூடுதல் எண்ணெய் மட்டுமே உயர்த்த முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை போர்
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் அமெரிக்க 2014-2016ல் உருவாக்கிய கச்சா எண்ணெய் விலை போர் தான். 2014 இறுதியில் அமெரிக்காவின் Shale அதிகப்படியான கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்து OPEC நாடுகளின் வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு. பல முறை விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்கா கேட்கவில்லை.

அமெரிக்கா – OPEC
இதனால் OPEC நாடுகள் அமெரிக்காவின் வர்த்தகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான கச்சா எண்ணெய்-யை உற்பத்தி செய்து விலை பெரிய அளவில் குறைந்தது. இந்தப் போட்டியில் சவுதி அரேபியா மற்றும் OPEC நாடுகள் வெற்றிபெற்றாலும் பல வருடங்களாக வளைகுடா நாடுகள் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

OPEC ஆலோசனைக் கூட்டம்
இதனாலேயே OPEC+ அமைப்பில் இருக்கும் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி கூடுதல் உற்பத்திக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் கடந் வாரம் புதன்கிழமை நடந்த OPEC ஆலோசனைக் கூட்டம் வெறும் 13 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.

கண்டுகொள்ளவில்லை
இந்தக் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான சில நாடுகள் ரஷ்யா – உக்ரைன் போர் பிரச்சனை குறித்தும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்துப் பேசும் போது பெரிதாகக் கண்டுகொள்ளாமல் ஆலோசனையைத் திசை மாற்றியது.

சீனா மற்றும் ரஷ்யா
2014-2016ல் அமெரிக்கா உருவாக்கிய கச்சா எண்ணெய் விலை போருக்குப் பின் சவுதி அரேபியா உட்பட அனைத்து OPEC நாடுகளும் அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதைக் குறைத்துவிட்டு சீனா மற்றும் ரஷ்யா உடன் கைகோர்த்து தனது வர்த்தகம் மற்றும் ஆதரவுகளைப் பெற்று வருகிறது.

இந்தியா
சரியான நேரத்தில் சரியான பதிலடியைச் சவுதி அரேபியா அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது. ஆனால் மறைமுகமாகக் கச்சா எண்ணெய் உயர்வு மூலம் பாதிக்கப்படுவது இந்தியா தான்.
ஒருபேரால் கச்சா எண்ணெய் விலை 135 டாலர் என்றால் கட்டாயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறைந்தது 25 ரூபாய் உயரும்…
Saudi Price MB Salman Commitment To Russia; Is this Retaliation to USA for 2014-16 Oil Price War
Saudi Price MB Salman Commitment To Russia; Is this Retaliation to USA for 2014-16 Oil Price War ரஷ்யா பக்கம் சாய்ந்த சவுதி அரேபியா.. அமெரிக்கா-வின் 2014 விலை போருக்கு பதிலடி..!