கீவ்: உக்ரைனின் செவ்ரோடோநெஸ்ட்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனில் 14வது நாளாக தாக்குதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ், கார்கிவ், ஈர்பின் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இன்று இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கீவ் நகரில், ரஷ்ய படைகள், விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, செவ்ரோடோநெஸ்ட்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவல் துண்டிப்பு
உக்ரைனில் இருந்த செர்னோபில் அணு உலையை ரஷ்யா கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அந்த அணு உலையுடனான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போலந்து யோசனை நிராகரிப்பு
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள போலந்து நாடு, இதற்காக தன்னிடம் உள்ள மிக் 29 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடம் வழங்க தயாராக உள்ளதாகவும், அதனை அந்நாடு, உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால், இந்த திட்டம் ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறியுள்ள அமெரிக்கா, நேடோ அமைப்பிற்கு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
Advertisement