108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன் இருக்க வேற என்ன வேணும்!

சீனாவின் ஆப்பிள் என்று கூறப்படும் சியோமி நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அனைத்து தரப்பு பயனர்களுக்குமான பிராண்டாக மாறியிருக்கும், சியோமி தங்களின் ரெட்மி, மி, போக்கோ போன்ற பிராண்டுகள் மூலமாக பல தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நிறுவனம் இந்தியாவில் இன்று தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
Redmi Note 11 pro
மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில்,
Redmi Note 11 Pro Plus 5G
ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

போட்டி நிறுவனங்களை மனதில் வைத்து தான் எப்போதும் சியோமி நிறுவனம் புதிய தயாரிப்புகளுடன் சந்தையில் நுழைகிறது என்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் வெளியீடும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 5ஜி மார்க்கெட்டை சரியாக புரிந்து கொண்டு, தனது தயாரிப்புகளுக்கு நிறுவனம் வடிவம் கொடுத்து வருகிறது.

இன்று வெளியான சியோமி நோட் 11 ப்ரோ பிளஸ் மேம்பட்ட பதிப்பில், 5ஜி ஆதரவு, 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் புராசஸர், 67W பாஸ்ட் சார்ஜர், 108 மெகாபிக்சல் கேமரா ஆகியவை சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

Poco X4 Pro போன் இருக்க வேற என்ன வேணும் – MWC 2022 நிகழ்வில் வெளியீடு!

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (redmi note 11 pro plus 5g features)

புதிய ரெட்மி போனில் 6.67″ அங்குல அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. 360Hz வரை டச் சேம்பிளிங் ரேட்டும் இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான
MIUI 13
ஸ்கின் உடன் இயங்குகிறது. 5ஜி ஆதரவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு அட்ரினோ 619 எஞ்சின் உதவுகிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி கேமரா (redmi note 11 pro plus 5g camera)

கேமராவைப் பொருத்தவரை, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.9 அபெர்ச்சரில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், எப்போதும் போல 2MP மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை கொண்ட குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக f/2.4 அப்பெர்ச்சர் கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1080 பிக்சல் வரையுள்ள முழு அளவு எச்டி தரத்திலான வீடியோக்களை படம்பிடிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி பேட்டரி (redmi note 11 pro plus 5g battery)

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி, 8ஜிபி LPDDR4X ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரிக்காக 128ஜிபி, 256ஜிபி UFS2.2 வழங்கப்பட்டுள்ளது. அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கூடுதல் பிளஸ் என்றே சொல்லலாம்.

5ஜி, வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC, Infrared ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை ஊக்குவிப்பதற்காக 67W டர்போ சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. சார்ஜிங் அடாப்டரும் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி விலை (redmi note 11 pro plus 5g price in India)

Phantom White, Mirage Blue, Stealth Black ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஒத்ததாக, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இருக்கிறது.

Poco X4 Pro போன் இருக்க வேற என்ன வேணும் – MWC 2022 நிகழ்வில் வெளியீடு!

இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை
ரூ.18,999
ஆகவும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை
ரூ.20,999
ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை
ரூ.22,999
ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், சியோமி இந்தியா தளங்களின் மார்ச் 15 ஆம் தேதி, பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த உங்களின் பார்வையை, கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.