இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் சமாதான பேச்சுக்கு தயார். நேட்டோவுடன் இணைய உக்ரைன் முயற்சி செய்யாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா இடையே சமாதானம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்திலேயே தொடங்கின.
இன்ஃபோசிஸ் Vs விப்ரோ: எந்த பங்கு சிறந்தது? எதை வாங்கி போடலாம்?
தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்திலேயே சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கின. குறிப்பாக இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 142.42 புள்ளிகள் அதிகரித்து, 53,566.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 41.90 புள்ளிகள் அதிகரித்து, 16,055 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1465 பங்குகள் ஏற்றத்திலும், 310 பங்குகள் சரிவிலும், 57 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவு எப்படி?
இதனையடுத்து முடிவிலும் நல்ல ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1223.24 புள்ளிகள் அதிகரித்து, 54,647.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 331.90 புள்ளிகள் அதிகரித்து, 16,345.40 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 2585 பங்குகள் ஏற்றத்திலும்,681 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகள் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ்,பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக ஏற்றத்திலும், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எம் & எம், இந்தஸ்இந்த் வங்கி டாப் கெயினரராகவும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எம் & எம், இந்தஸ்இந்த் வங்கி மட்டுமே டாப் கெயினராக உள்ளது. இதே பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், நெஸ்டில், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
Closing bell: sensex jump above 1200 points, nifty ends below 16,350
Closing bell: sensex jump above 1200 points, nifty ends below 16,350/1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!