உக்ரைனின் பல்வேறு நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், சுமி நகரத்தில் குண்டுகள் வீசி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, இங்கு சிக்கியிருந்த 700 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் 13 பேருந்துகளில் பாதுகாப்புடன் போல்டவாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, சிறப்பு ரயில் மூலம் சுமார் 888 கிலோ மீட்டர் பயணித்து லிவிவ் நகருக்கு வந்து சேர்ந்தனர். பின்னர், அங்கிருந்து பேருந்துகளில் போலந்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இன்று போலாந்தில் இருந்து விமானம் மூலம் 700 மாணவர்களும் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.