Android 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்!

கூகுள்
நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் உலகளவில் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 90% விழுக்காட்டிற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகள்
Android
இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன.

கூகுளும் தங்களுக்கென பிரத்தியேக பிக்சல் ஸ்மார்ட்போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு மேம்பட்ட பதிப்பு வெளியாகும் போது, முதலில் பிக்சல் போன்களுக்கே வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்தியேக அப்டேட்டுகளும் கொடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், புதிய பிக்சல் அப்டேட், பிக்சல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 12L என இந்த மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் கூறப்படுகிறது. இதில், பல முக்கிய அம்சங்களை கூகுள் நிறுவனம் நிறுவியுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு பழைய
Pixel 3a
முதல் Pixel 5a வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. புதிய பிக்சல் 6 சீரிஸ் போன்களுக்கு ஏன் இன்னும் அப்டேட் கிடைக்கவில்லை என அதிர்ச்சி அடைய வேண்டாம்.

கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப கம்மி!

ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிற பிக்சல் போன்களுக்கும் புதிய அப்டேட் கிடைக்கும் என கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்கள் அடுத்த மாதம் வரை புதிய அப்டேட்டுக்காக காத்திருக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு 12எல் அம்சங்கள் ‘Android 12L features’

புதிய அப்டேட் மூலம் நேரடி கேப்ஷன்களை கூகுள் மேம்படுத்துகிறது. முன்னதாக, இந்த அம்சம் நிகழ்நேரத்தில், ஆடியோவிலிருந்து கிடைக்கும் உரையை திரையில் காட்சிப்படுத்த (Live Captions) அனுமதிக்கிறது. ஆனால் அது இப்போது குரல் அழைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பதிப்பில், அழைப்புகளில் மறுபுறம் மற்றவர் என்ன சொல்கிறார் என்பதை நம் திரையில் பார்க்க முடிகிறது. இதைச் சத்தமாக வாசிக்கவும் ஆண்ட்ராய்டு அனுமதிக்கிறது. பேச்சுத் திறன் குன்றிய நபர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய பேட்டரி விட்ஜெட்டையும் ஆண்ட்ராய்டு தனது புதிய அப்டேட்டில் கொண்டுள்ளது. பேட்டரி திறன், எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் அடங்கியதாக இந்த விட்ஜெட் இருக்கிறது.

Snapchat சமூக வலைத்தள செயலிக்காகவும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. Pixel பயனர்கள் இப்போது ஸ்னாப்சேட் செயலியை டார்க் மோடில் பயன்படுத்த முடியும். மேல் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள பிறை நிலவு ஐகானைத் தட்டுவதன் மூலம் இந்த அம்சத்தைப் பயனர்கள் ஆக்டிவேட் செய்ய முடியும்.

இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!

கூகுள் கீபோர்டு அப்டேட்

நீங்கள் தட்டச்சு செய்யும் உரையின் அடிப்படையில் ஈமோஜிகள், ஸ்டிக்கர்களை பரிந்துரைக்கும் புதிய அம்சத்தை Google Keyboard பெற்றுள்ளது. இந்த அம்சம் உலகளவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும். இருப்பினும், இது ஆங்கில மொழிக்கு மட்டுமே வேலை செய்யும்.

நேரடி மொழிபெயர்ப்பு அம்சத்தில் ஸ்பேனிஷ் மொழிக்கான ஆதரவை Google சேர்த்துள்ளது. தற்போது ஸ்பேனிஷில் ‘Hey Google’ என்று அழைத்து கூகுள் அசிஸ்டண்ட் உதவியை நாடலாம்.

Read more:

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்? முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி

Google-Pixel விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Snapdragon 821சேமிப்பகம்32 GBகேமரா12.3 MPபேட்டரி2770 mAhடிஸ்பிளே5.0″ (12.7 cm)ரேம்4 GBமுழு அம்சங்கள்
Google-PixelGoogle Pixel 128GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.