5 states Assembly election results 2022 live : பஞ்சாப், கோவா, உ.பி., உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இன்று (10/03/2022) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. பஞ்சாப், கோவாவில் மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயன்று வருகின்ற நிலையில் டெல்லி மாடலும், சமீபத்திய சண்டிகர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இந்த இரண்டு மாநிலங்களிலும் கை கொடுத்துள்ளதா என்பதை இன்றைய முடிவுகள் தீர்மானிக்கும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்; யார் பக்கம் நிற்கின்றனர் மக்கள்?
UP Election Results
பசு பாதுகாப்பு, ராமர் கோவில், கோவில் கட்ட வாங்கப்பட்ட நிலத்தில் மோசடி, மாட்டிறைச்சி விவகாரம், சி.ஏ.ஏ. லக்கீம்பூர் கேரி விபத்து, கரும்பு விவசாயம் செய்யும் ஜாட் மக்களை போராட்டத்திற்குள் தள்ளிய விவசாய சட்டங்கள் என்று பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாஜகவின் கோட்டை என்று அழைக்கப்படும் உ.பியில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா அல்லது சமாஜ்வாடி கூட்டணியிடம் மண்டியிடுமா என்பதையும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கணிசமான அளவிலாவது வாக்குகளை பெற்றுள்ளதா என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.
Punjab Election Results
விவசாயிகள் போராட்டம், விவசாய சட்டங்களை திரும்பிப் பெற்ற நிகழ்வு, பிரதமரின் கான்வாயை பாலத்தில் நிற்க வைத்து அவரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய பொதுமக்கள், தேர்தலுக்கு வெகு சில மாதங்களே இருந்த நிலையில் பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங், முதல் தலித் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என்று பல்வேறு திருப்புமுனைகளை அடுத்தடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த விவசாய பெருங்குடிகளை அதிகம் கொண்ட பஞ்சாப் மாநில மக்கள் மனதில் வெற்றி பெற்றது யார் என்பதையும் கணிக்க உள்ளது இந்த தேர்தல் முடிவுகள் .
403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில பதிவான வாக்குக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகள் முக்கியமில்லை, நாங்கள் 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் 403- தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகக்கு 250 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்றும். சமாஜ்வடி கூட்டணிக்கு 145-முதல் 150 இடங்கள் வரை வெற்றி கிடைக்கும் எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.