அடப்பாவமே, கமல் மகளாக இருந்தும் ஸ்ருதிக்கு இப்படி ஒரு நிலைமையா!

பாபி இயக்கத்தில் மெகா ஸ்டார்
சிரஞ்சீவி
நடிக்கும் படத்தை தற்போதைக்கு மெகா 154 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார்
ஸ்ருதி ஹாசன்
.

மெகா 154 படத்தில் ஸ்ருதி நடிப்பதை மகளிர் தினத்தன்று உறுதி செய்தார் சிரஞ்சீவி. அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர்ஸ்டாரை பார்த்து சந்தானம் சொன்ன வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்கிறார்கள்.

அவங்க அப்பனோட ஸ்கூல் படிக்குற, அவன் பொண்ணுக்கே ரோஸ் குடுக்கிற என்று சந்தானத்தின் வசனத்தை வைத்து சிரஞ்சீவியை கிண்டல் செய்கிறார்கள்.

சிரஞ்சீவி மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகின் மற்றொரு சூப்பர் சீனியரான பாலகிருஷ்ணாவுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.

கோபிசந்த் இயக்கி வரும் அந்த தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ருதி ஜோடியாக நடித்து வருவதை ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. பாலய்யா பக்கத்தில் நின்றால் மகள் போன்று தெரிவாரே என்கிறார்கள்.

கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே ஸ்ருதி ஹாசன் இப்படி தன் அப்பா வயது நடிகர்களுடன் ஜோடி சேரும் நிலைமையாகிவிட்டதே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். உலக நாயகன் கமலின் மகளாக இருந்தும் அவரை போய் சூப்பர் சீனியர்களுடன் நடிக்க வைக்கிறார்களே என்கிறார்கள்.

வீடு திரும்பிய கையோடு ஐஸ்வர்யா அதிரடி: தனுஷே இன்னும்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.