பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 91 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சி பிடிக்கிறது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி மஜிதியாவை விட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன்ஜோதி கவுர் 3000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருந்தார். சித்து மூன்றாவது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியடைந்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முதலே சித்து பின் தங்கி வந்தார். தற்போது 13 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து 32929 வாக்குகள் பெற்று 6750 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
ஆம் ஆத்மி 39679 வாக்குகள் பெற்று அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..
யோகி ஆதித்யநாத் 34000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- பாஜக தொண்டர்கள் உற்சாகம்