புதுச்சேரி-புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் பதிவேடுகளை கணனிமயமாக்கிட, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.புதுச்சேரி, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை பராமரிப்பது, பெரும் சிரமமாக உள்ளது.அதனால், பதிவேடுகளை கணினிமயமாக்கவும், வரும் காலங்களில் மருத்துவமனையில் அனைத்து பதிவேடுகளையும் கணினியில் பதிவு செய்திடவும், சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.இப்பணிக்காக, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், சென்னையை சேர்ந்த சாராடெக் நிறுவனத்துடன் நேற்று முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் மற்றும் சாராடெக் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், மருத்துவமனையில் தற்போதுள்ள பதிவுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.இதனால், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் மருத்துவ சட்ட வழக்குகளுக்கான பதிவுகளை எளிதாக பெற முடியும்.
Advertisement