உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி வாக்கில் விலகிய அஸ்வினி குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“தேர்தல் முடிவுகளிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இனி காந்திகளின் தலைமை காங்கிரஸ் கட்சியில் வேலைக்கு ஆகாது என்பதுதான் அது. அவர்கள் இனி கட்சியை வழிநடத்தும் சக்தியாக இருக்கப்போவதில்லை. அவர்களால் தேர்தலில் கட்சியை கரை சேர்க்க முடியாது என்பதை இந்த முடிவுகள் தெளிவாக விளக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான அஸ்வினி குமார்.
இந்த தேர்தல் முடிவுகள் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM