Congress MP Karthik Chidambaram Twitter Post Viral : இந்தியாவில் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், வாககு எண்ணிக்கை தொடங்கியது முதலே பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றது.
தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பின்படியே தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி வலுவாக எதிர்கட்சியாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இங்கு 260 தொகுதிக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், 130 தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல் மற்ற மாநிலங்களாக உத்திரகாண்ட் மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஏற்கனவே இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்து வந்த நிலையில், மீண்டும் தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை இழந்துள்ளது. அங்கு 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 90-க்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.
இதில் உத்திரகாண்ட் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் மணிப்பூர் கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில, காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Any recommendations for what to watch on @netflix now!
— Karti P Chidambaram (@KartiPC) March 10, 2022
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் எதை பார்க்கலாம் எதாவது பரிந்துளை உள்ளதா என்று கேட்டு பதிவிட்டுள்ள நிகழ்வு கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்துள்ள நிலையில் கார்த்திக் சிதம்பரத்தின் இந்த ட்விட்டர் பதிவை பவரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் தேர்தல் தோல்வி மக்கள் அளித்த முடிவு இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நினைத்து வருத்தப்பட்டால் எந்த பலனும் இல்லை என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.