பியூச்சர் குரூப் வர்த்தகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அமேசான் தொடுத்த வழக்கு மார்ச் 3ஆம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைச் சரி செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். சுமார் 18 மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்குத் தீர்வு காணப்பட உள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்குப் பின்பு எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இருக்க, அமேசான் தானாக முன் வந்து பேச்சுவார்த்தையைத் துவங்கி வைத்துள்ளது.
பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றி வரும் ரிலையன்ஸ்.. ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!
அமேசான்
அமேசான் நிறுவனத்தின் சார்பாகச் சட்ட நிறுவனமான AZB அண்ட் பார்ட்னர்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தை அணுகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல்-க்கு ஃபியூச்சர் குழுமத்தின் வர்த்தகத்தை விற்பனை செய்வதில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அவுட் ஆப் கோர்ட் செட்டில்மெண்ட் செய்ய அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தீர்வுக்கான முன்வந்துள்ளது.
மார்ச் 15
AZB அண்ட் பார்ட்னர்ஸ் மூலம் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ள அமேசான் இந்த வார இறுதிக்குள் மூன்று நிறுவனமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது. மேலும் Out of court Settlement-க்குச் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து 12 நாள் அவகாசம் கொடுத்துள்ளது. இதன் மூலம் மார்ச் 15ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை தொடர உள்ளது.
ரிலையன்ஸ் ஆதிக்கம்..
இந்தியாவில் ரீடைல் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஏற்கனவே மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் தனது வர்த்தகத்தை ஆன்லைன் ஆப்லைன் என இரு பிரிவிலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் அமேசான் உடன் சேர்ந்து வெளிநாடுகளுக்குத் தனது வர்த்தகத்தைக் கொண்டு செல்லவும் விருப்பம் இல்லை.
அமேசான் தேவை இல்லை
இந்தச் சூழ்நிலையில் அமேசானின் தேவை கட்டாயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு தேவையில்லை. இதனால் மூன்று நிறுவன பேச்சுவார்த்தையில் அமேசான், பியூச்சர் குரூப் பங்குகளுக்கு இணையான ரிலையன்ஸ் பங்குகளைக் கேட்டால் கட்டாயம் முகேஷ் அம்பானி ஏற்க வாய்ப்பு இல்லை. இதேபோல் கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை.
பியூச்சர் குரூப் கடைகள்
இதனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து பியூச்சர் குரூப் கடைகளைக் கைப்பற்றும். இதனால் மதிப்பீட்டை இழப்பது அமேசானும், பியூச்சர் குரூப்-ம் தான். எனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு இதன் மூலம் தாமதம் மட்டும் பாதிப்பு மற்றபடி எந்தப் பிரச்சனையும் இல்லை.
25000 கோடி ரூபாய்
மேலும் அமேசான் ஏற்கனவே பியூச்சர் குரூப்-ஐ கைப்பற்ற 25000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு இணையான தொகையை அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து பெறும். இந்த 3 நிறுவனங்களின் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாவிட்டால் கட்டாயம் வழக்குகள் தொடரும்…
Amazon approaches Reliance Retail for talks Future Group’s deal
Amazon approaches Reliance Retail for talks Future Group’s deal இறங்கி வந்த அமேசான்.. விட்டுக்கொடுக்குமா ரிலையன்ஸ்.. பாவம் பியூச்சர் ரீடைல்..!