உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல மருத்துவமனையின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி நிகழ்த்திய தாக்குதலில், 17 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமானது எனவும் போருக்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த அர்த்தமற்ற வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் இரத்தக்களரியை இப்போதே நிறுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.