உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கத்திற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்கவில்லை என ரஷ்யா மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா கூறுகையில், உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும்.
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்தப் போா் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்றாா் அவா்.
கடந்த மாதம் 24-ஆம் திகதி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இதே கருத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.