ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் போர் நிலை உக்கிரமடைகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன.
எப்போது குண்டு விழும்? போரின் முடிவில் நாம் உயிர் பிழைப்போமா? பழைய அமைதியான வாழ்க்கை நமக்கு கிடைக்குமா? நமது குடும்பத்தினர், நண்பர்கள் உயிரோடு இருப்பார்களா? என்பன போன்ற மில்லியன் கணக்கான கேள்விகளோடும் அச்சத்தோடும் நாட்களை கடத்தி வருகின்றனர் உக்ரைன் மக்கள்.