ரஷ்யாவால் தாக்குதல் முறியடிப்பு
ரஷ்ய படையினர் உக்ரைனில் நுழைந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான டான்பாஸில் தாக்குதல் நடத்த உக்ரைன் அரசு திட்டமிட்டிருந்தது. ரஷ்யாவின் நடவடிக்கையால், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலை நிறுத்திய நிறுவனங்கள்
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், பெப்சி’ உள்ளிட்ட உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், ரஷ்யாவில் தங்கள் தொழிலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்தன.உக்ரைன் அதிபர் கோரிக்கைபிரிட்டன் பார்லிமென்டில், நேற்று முன்தினம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக சிறப்புக் கூட்டம் கூடியது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்,” என்றார்.
முன்னாள் மாடல் அழகி சூளுரை
ரஷ்ய படையின் தாக்குதலில் இருந்து தப்பித்து, நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் நாட்டின் முன்னாள் அழகியான வெரோனிகா டிடுசென்கோ கூறியதாவது:உக்ரைன் மக்களுக்கு, தங்கள் நாட்டை பாதுகாக்கும் தைரியம் உள்ளது. எனினும், ஆயுதங்கள் மட்டும் தேவைப்படுகிறது. எனவே, உக்ரைன் மக்களுக்கு ஆயுதங்கள் அளித்து உலக நாடுகள் உதவ வேண்டும். உக்ரைனின் சுதந்திரத்திற்காக, ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் சண்டையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement