உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் அமேசான் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் டெலிவரி சேவைகள், அமேசான் பிரைம் ஓடிடி தள சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், AWS கிளவுட் கம்ப்பியூட்டிங் சேவைக்கு இரு நாடுகளில் இருந்தும் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதோடு, நியூ வேர்ல்ட் (New World) எனும் அமேசானின் வீடியோ கேம் விற்பனையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து செய்துவருவதாக தெரிவித்துள்ள அமேசான், இதற்காக தொண்டு நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.