உக்ரைன் மக்களுக்கு 2-வது தவணையாக உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படை விமானம் ருமேனியா சென்றடைந்தது.
புகாரெஸ்ட் விமான நிலையம் வந்தடைந்த உதவிப் பொருட்களை ருமேனிய அதிகாரிகளிடம் வழங்க உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா, உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து கடந்த 2ஆம் தேதி உதவிப் பொருட்களுடன் முதல் விமானம் சென்ற நிலையில், தற்போது 2-வது தவணை மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.