உக்ரைன் விவகாரத்தை ராஜாங்க முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை மனிதநேய வழிகள் மூலம் வெளியேற்றியது தொடர்பாக புதின் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய அதிபர் புதின் மனிதாபிமான வழித்தடத்தில் மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தாக்குதல்கள் குறித்தும் ஜெர்மனி பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.